மாதகலில் 150 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சா நேற்றுமுன்தினம் (மார்ச் 28) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மாதகல் கடற்கரை பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதை தொடர்ந்து அருகில் மறைத்து வைத்திருந்த ஓர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா தற்போது சட்ட நடவடிக்கைக்காக காங்கேசனதுறைக் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Share this Article