மாணவர்களுக்குப் பசும்பால் வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் செயற்றிட்டம் யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தால் இன்று (மார்ச் 22) யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் க.தவசீலன் தலைமையில் இந்தநிகழ்வு இடம்பெற்றது.

யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்க சமாசத்தால் மாவட்டத்தில் 12 பிராந்தியங்கள் வகைப்படுத்தப்பட்டு பசும்பால் தேவையுடைய மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இலவசமாக பசும்பால் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர் பருவத்தில் அவர்களின் ஊட்டச்சத்து மந்த நிலையைப் போக்கி ஆரோக்கியமான இளம் சமுதாயத்தை உருவாக்குவதே இந்தச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் யாழ். மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தின் நல்லூர் பிராந்திய சபைத்தலைவர் சு.சிவலிங்கம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செ.சாதனா, நல்லூர் பிராந்திய உத்தியோகத்தர் ந.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this Article