மல்லாவியில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள் – இளைஞர் பலி – ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மல்லாவியில் நேற்று(ஜூன் 25) மதியம் நடந்த விபத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா, தேக்கவத்தையைச் சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மல்லாவி, திருநகரைச் சேர்ந்த கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இவர் மல்லாவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதியில் இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளும், சிறிய ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன. மோட்டார் சைக்கிள் முற்றாகத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் மல்லாவிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this Article