மல்லாகம் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவியில் இருந்துநீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர்என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினிஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் நீதிச்சேவை ஆணைக்குழுவில்சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொர்பானவிசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 23.09.2025 அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவில்இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான், நீதிவான் ஒருவருக்குரியகண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவானசான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தன.

இதை தொடர்ந்து குறித்த நீதிவான் தனது பதவி விலகல் கடிதத்தினைஉடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கையளித்ததன் அடிப்படையில்அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் 23.09.2025 இலிருந்து பதவி நீக்கம்செய்யப்பட்டார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம்நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்டநீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களை பொறுப்பேற்றுநீதிமன்ற பதிவாளரிடம் கையளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய மேல் நீதிமன்றநீதிபதி புதிய நீதவான் ஒருவர் வெகுவிரைவில் நியமிக்பப்படுவார் எனசட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Article