மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்பநிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று (24) வருகை தந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோருடன் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்திஇருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம்பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தேஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி, மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கானஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.