பொலிஸ் காவலரன் மீது கல் வீச்சு தாக்குதல்!- பொலிஸாரால் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் பண்ணையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரன் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு (மே 27) இனம் தெரியாத நபரொருவர் குறித்த பொலிஸ் காவலரன் கண்ணாடி மீது கல் வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்ததுள்ளார் இதன் போது அங்கு கடமையில் இருந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தான் மது போதையில் கல் வீசியதாக கூறியுள்ளார். சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article