பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை மற்றும் சீனா பெளத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கமும் இணைந்து பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள பொருண்மியம் நலிந்த  மக்களுக்கு உலர் உணவு நன்கொடை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்று (நவம்பர் 6) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் குழுவினரால் நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளிகளுக்கு அண்ணளவாக ரூபா 7000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வில் இன்றையதினம் முதல்கட்டமாக 100 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளா், உதவி மாவட்ட செயலாளர் , பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர் – நெடுந்தீவு மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Share this Article