பேச்சு,எழுத்துப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மறைமாவட்ட ரீதியில் நடைபெற்ற பேச்சு மற்றும் திருவிவிலிய எழுத்துப்போட்டி ஆகியவற்றில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி நடைபெற்றது.

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

தீவக மறைக்கோட்டத்தில் பதினைந்து என்கின்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்று முதலிடத்தில் நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை திகழ்கின்றது.

அடுத்த வருடத்தில் முப்பது பதக்கங்களாக உயர்வடைவதே தமது விருப்பும் அனைவரது எதிர்பார்புமென தெரிவித்த பங்குத்தந்தை அதை நிரூபிக்கும் வல்லமை மாணவர்களிடமே உள்ளது எனவும் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

Share this Article