முல்லைத்தீவு மாவட்டத்தில் தாய் தந்தையரை இழந்து பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களில் வசித்துவரும் 200 மாணவர்களுக்கு ஆயிரம் அப்பியாசக் கொப்பிகள் நேற்றைய தினம் (ஏப்ரல் 15) வழங்கி வைக்கப்பட்டன.
புலம்பெயர் தேசத்தில் (லண்டன்) வசித்து வருபவரான திரு.சீவரட்ணம் ஜீவானந் அவர்களின் நிதிப்பங்களிப்பில் இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
இந்தத் திட்டத்தில் இன்னும் ஆயிரம் அப்பியாசக் கொப்பிகள் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளன.
01. மு/தேராவில் தமிழ் வித்தியாலயம்.
02.மு/ முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை.
03. மு/ ஆறுமுகத்தான் குளம் தமிழ் கலவன் பாடசாலை.
04.மு/ கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை.
குறித்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.