இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான “புங்குடுதீவு பெருக்குமரம், மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரைச் சூழல்” புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் பல இலட்சம் ரூபா செலவு செய்து அண்மையில் பொதுமக்களின் பொழுதுபோக்கும் சூழலாகவும் மாற்றி அழகுபடுத்தப்பட்டது.
புங்குடுதீவு பெருக்குமரச் சூழலை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடனும், அழகுபடுத்தும் நோக்குடனும் புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்கள் சிரமதானப் பணி மூலம் அழகுபடுத்தினர்.
சமய சமூக பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது முன்னுதாரணமாக கருதப்படுகிறது. கொம்மாபிட்டி அறநெறிப் பாடசாலை இயக்குனர் திரு.சதாசிவம் வைகுந்தராசா அவர்களின் அனுமதியோடு அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்களின் வழிகாட்டுதல்களோடும் சிறப்பான பணி மேற்கொள்ளப்பட்டது.