புகையிரதத்துடன் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(ஏப்ரல் 17) காலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

80 வயதுடைய சிவசுப்பிரமணியசர்மா என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article