பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனிதஉரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி இன்றைய தினம்(டிசம்பர் 11) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர்அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதேச மற்றும்ஆதார வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்திய உபகரணங்களின்தேவைப்பாடுகள் உள்ளதாகவும் அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரசாங்கஅதிபர் கோரிக்கையினை முன்வைத்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில்ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் தொடர்பாகவும் முதன்மைச் செயலாளர் வினாவிய போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வார காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம்போல் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணமிருக்க சீரான வடிகாலமைப்பு முறைகளின்அவசியம் பற்றி தெரிவித்த அரசாங்க அதிபர், வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் இது வரை ரூபா.50 மில்லியன்நிதி விடுவிக்கப்பட்டது.
மீள்குடியேற்ற நிலவரங்கள், அஸ்வெசுமத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவுமுறைமை, வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை அரசாங்கஅதிபரிடம் முதன்மைச் செயலாளர் கேட்டறிந்து கொண்டார். இதன் போது, யாழ்ப்பாண மாவட்ட த்திற்கான வீடமைப்புத் திட்டத்தின் தேவைப்பாடுகளையும்அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன் மேலும், மீள்குடியேற்ற வேலைத் திட்டங்கள்முன்னேற்றகரமாக நடைபெற்று வருவதாகவும், நலன்புரி நிலையங்களில்தங்கியிருந்த காணியற்ற குடும்பங்களுக்கு காணி அரசாங்கத்தின் நிதி மூலம்கொள்வனவு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டமும் வழங்கப்பட்டதாகவும்குறிப்பிட்டதுடன், ஒரு நலன்புரி நிலையத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்களேதங்கியிருப்பதாகவும் அவர்களுக்கும் காணிக் கொள்வனவு செய்வதற்கானஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இம் மாத இறுதிக்குள்அவ் ஒரேயொரு நலன்புரி நிலையமும் மூடப்படவுள்ளதாகவும் அரசாங்கஅதிபரால் தெரிவிக்கப்பட்டதாக யாழ், மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.