நேற்றைய தினம் மண்டதீவில் ஒரே குடும்பத்தினை சார்ந்த இரண்டு சிறுவர்கள் வயற்காணியில் வெட்டப்பட்ட கேணியில் தவறிவீழ்ந்து மரணமடைந்த துயரமான சம்பவம் இடம் பெற்றது.
மண்டதீவு இரண்டாம் வட்டாரத்தில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் வயது 05 மற்றும் வயது 06 ஆகிய ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மரணடடைந்துள்ளார்கள்
பிள்ளைகளின் தாயார் நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தினை சேர்ந்தவர் தற்போது மண்டதீவில் திருமணமாகி மண்டதீவிலேயே வாழ்ந்து வந்தார்கள்
இச் சம்பவம் தொடர்பாக மண்டதீவு மக்கள் கருத்து தெரிவிக்கையில் மண்டதீவினை சொந்த இடமாக கொண்ட குறிபிட்ட கேணி அமைந்துள்ள காணி உரிமையாளர் தற்போது யாழ்ப்பாணத்தில் வாழந்து வருகின்றார் எனவும், அவர் தனது காணியில் மாடுகளுக்கு தண்ணீர் பெற்றுக் கொள்வதற்காக எனக்கூறி யாருக்கும் தெரியாத வகையயில் இக் கேணியினை அமைத்திருப்பதாகவும் இக் கேணி சரியான முறையில் பாதுகாப்பான வகையில் அமைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியம் உள்ளனர்
மேலும் இக் கேணி அமைப்பதற்கான அனுமதிகள் சரியான முறையில் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தானகவே தனது காணியில் வைக்கோ உதவியுடன் இக் கேணியினை அமைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அரன்கள் சரியான முறையில் அமைக்கபடாiயினாலேயே இச் சிறுவர்களது உயிர் பிரிந்துள்ளதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஊhர்கவற்துறை நிதி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டதுடன் தற்போது சிறுவர்களது உடல்கள் பெற்றோர்கள் உறவினர்கள் கரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.