பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கிராம அலுவலர் பிரிவுகளில் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்காக காணிகள் விரிவுபடுத்தப்படவுள்ளது.

மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி தெற்கு, குரும்பசிட்டி, பலாலி தெற்கு, பலாலி மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குள் பலாலி விமான நிலையம் விரிவுபடுத்தப்படும்.

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கான காணி உரிமையாளர்களுக்கு காணி எடுத்தல் சட்டம் (அத்தியாயம் 460) பிரிவு 9 இன் கீழ் ஆவணங்கள் பரிசீலனை மற்றும் நட்ட ஈட்டுக் கோரிக்கை தொடர்பான விசாரனை, எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி 5 ஆம் 6 ஆம் ஆகிய தினங்களில் காலை 9.00 மணி தொடக்கம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

காணி உரிமையாளர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என தெல்லிப்பளை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

Share this Article