பல லட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலை யாழில் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்ட பெறுமதி மிக்க ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாண மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியானது என்று கருதப்படுகின்றது. இந்தச் சிலையைக் கடத்தியவர் தலைமறைவாகியுள்ளார்.

கடத்தி வரப்பட்ட சிலை ஒன்று யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழு சிலையைக் கைப்பற்றியது.

சிலையைக் கடத்தியவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share this Article