பருத்தித்துறை வீதியில் நடந்த விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பூதர்மடத்தில் நேற்று (ஏப்ரல் 30) இரவு நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, பஸ்ஸூடன் உரசிக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article