பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுப் பெரும் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 3) காலை பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சி வடக்கு மீனவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 300 பேர்வரை கலந்து கொண்டனர். பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பிரதேச செயலக வாயில்களை மறித்து மீனவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

தற்போது பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை பொலீசார் மீனவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Article