தீவகம் ஊா்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருத்தித்தீவு பிரதேசத்தினை உாிமையாளா்களாக கருதுவோா் உடையேயான கலந்துரையாடல் இன்றைய தினம் ஊா்கவாற்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் இடம் பெற்றது.
இச் சந்திப்பில் ஆளுநாின் உதவிச் செயலாளா் திரு.ஜே.எக்ஸ்.செல்வநாயகம் அவா்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இணைப்புச் செயலாளா் திரு.மாாிமுத்து பரமேஸ்வரன் அவா்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தா்கள் கிராம சேவையாளா், பிரதேச செயலக உத்தியோகத்தா்கள் பிரதேச மக்கள் என அனைவரும் இணைந்து கொண்டனா்.
1973ம் ஆண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குாியதாக பிரகடனப்படுத்திய போதும் 1983ம் ஆண்டு குறிப்பிட்ட சிலருக்கு காணிக்குாிய சில ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடிப்படையாக கொண்டு மக்களால் கருத்துக்கள் தொிவிக்கப்பட்டது.
கருத்துக்கள் யாவும் உள்வாங்கப்பட்டு பருத்தித்தீவில் காணி உாிமையுடையவா்கள் ஒரு வார காலத்திற்குள் சகல ஆவணங்களையும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறும் அதன் பின்னா் இது தொடா்பாக கௌரவ ஜனாதிபதி பிரதமா் மற்றும் வன ஜீவராசிகள் கௌரவ அமைச்சா் ஆகியோாின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு மாதங்களுள் இதற்கான தீா்வு பெற்றுக் கொள்ள ஆவண செய்யப்படும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தின அமைச்சின் இணைப்பு செயலாளா் திரு.மா.பரமேஸ்வரன் அவாகள் தொிவித்துளளாா்.
இவ்வாறான கலந்துரையாடல் நிகழ்வு நாளை (பெப்ரவாி 09) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.