யாழில் கொரோனாவின் முதலவது மரணம் இடம் பெற்றுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்றுவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார்
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கோரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அவர் மாற்றப்பட்டார் எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று
மீளவும் மாற்றப்பட்டார்.

அவரை கோவிட் -19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது சடலம் கோவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
தெரிவித்தார்.

TAGGED:
Share this Article