பருத்தித்தீவில் 10 ஏக்கர் நிலம் கோரும் நகர அபிவிருத்தி அதிகார சபை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் எழுவைதீவுக்கும் அனலைதீவுக்கும் நடுவில் உள்ள மக்கள் யாரும் அற்ற தீவுப் பகுதியான  பருத்தித்தீவில் சுற்றுலாத் திட்டம் ஒன்று அமைக்க யாழ் நகர அபிவிருத்தி அதிகார சபை அவசர அனுமதி கோரியுள்ளது

51 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட பருத்தித்தீவு  முழுவதும் தமது ஆளுகைக்கு உள்பட்டது என 1974 இல் வன ஜீவராசிகள் திணைக்களம் அரச இதழ் பிரசுரித்துள்ளது. 1974 ஆம் ஆண்டு தீவு முழுவதுமே தனது ஆளுகை என வன ஜீவராசிகள் திணைக்களம் அரச இதழ் பிரசுரித்துள்ளது.

இதேவேளை 07 குடும்பங்களிற்கு தலா 2 ஏக்கர் வீதம் குடியிருக்க அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு இருந்த போதும் 1990 காலப்பகுதியில்  போர் காரணமாக அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இவ்வாறு வெளியேறிய மக்கள் தமது சொந்த இடத்தில் குடியேற அனுமதிக்காதபோதும் தற்போது பருத்தித்தீவில் ஓர் சுற்றுலாத் தளம் அமைப்பதற்கு என 10 ஏக்கர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை நிலம் கோருவது தொடர்பில் கடந்த புதன்கிழமை (நவம்பர்12) அன்று ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் விசேட காணிப்பயன்பாட்டுக் குழு கூட்டம் நடாத்தப்பட்டு ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article