பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் (NAITA) ஏற்பாட்டில் இன்று(நவம்பர் 6) அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர்கள் இணைந்து மாபெரும் இரத்ததானமுகாமினை சுண்டிக்குளியில் உள்ள யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் NAITA நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.அத்தோடு நிகழ்வில் குருதிக்கொடையாளர்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ்களும் வழங்கிகௌரவிக்கப்பட்டது.

குறித்த இந் நிகழ்விற்கு நல்லூர் வட்ட லயன்ஸ் கழகத்தினர் இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article