பதிவாளர் நாயகத் திணைக்களத்தால் உங்களுக்கு வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ் 06 மாத காலத்திற்குப் பிறகுசெல்லுபடியாகாது என்பது தவறானது என்பதுடன் எந்த காலத்திற்கும் அது செல்லுபடியாகும்.
(ஆறு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனும் நடைமுறை இரண்டுவருடத்திற்கு முன்பே இருந்தது தற்போது இல்லை)
கல்வி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை மற்றும் ஆட்பதிவுத்திணைக்களம் என்பவற்றிற்கு இது தொடர்பாகஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பதிவாளர் நாயகத்திணைக்களத்தால் வழங்கப்பட்ட தெளிவான சான்றளிக்கப்பட்ட நகல் உங்களிடம்இருந்தால், புதிய நகலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்பதை இதன்மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எப்படியிருந்தாலும், பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழில்திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, புதிய திருத்தப்பட்ட நகலைச்சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் தொடர்ந்தும் பாடசாலை நடவடிக்கைகள், சாரதி அனுமதிப்பத்திரம்பெறுதல், வெளிநாட்டு முகவர் சேவைகள் போன்ற பல தேவைக்களுக்காக ஆறுமாதத்திற்கு உட்பட்ட சான்றிதழை தருமாறு உரிய அதிகாரிகள் கோருவதாகபொதுமக்கள் அண்மையில் எடுத்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டும் ஆறுமாதத்திற்கு உட்பட்ட புதிய சான்றிதழ்களை பெற வருகிறார்கள்.
இது நடைமுறை விளக்கம் இல்லாத உத்தியோகத்தர்களின் நிலைப்பாடாகும். எனவே யாரும் உத்தியோகத்தர்கள் அவ்வாறு கேட்டால் பொதுமக்கள் இப்போது அவ்வாறு தேவையில்லை என உறுதியாக எடுத்துக் கூறவும்.
புதிய சான்றிதழ் கேட்கப்படும் சில சந்தர்ப்பங்கள்
1. சான்றிதழ் தெளிவற்று காணப்படுதல்
2. சான்றிதழில் பொறிக்கப்பட்டிருக்கும் முத்திரைகள் (Rubber Stamps) தெளிவற்றிருத்தல்
3. சான்றிதழில் ஏதாவது மாற்றங்கள் செய்து இருப்பதாக சந்தேகம் எழும் போது
உ+ம் : எழுத்துக்கள் சுரண்டப்பட்டிருத்தல்
4. உரிய அதிகாரிகளின் கையொப்பங்கள் சான்றிதழில் இல்லாமை
5. கையொப்பம் இட்ட அதிகாரியின் பெயர், பதவி என்பவற்றுடன் கூடிய முத்திரைபொறிக்கப்படாமை
6. சான்றிதழில் வழங்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருக்கும் தினத்திற்கும்வழங்கப்பட்ட தினமாக கையால் எழுதப்பட்டிருக்கும் தினத்திற்கும் இடையில்வேறுபாடுகள் காணப்படுதல்.