நெடுந்தீவு வைத்தியசாலையில் கடந்த வார இறுதி நாட்களில் (ஜனவாி 16 – 17) வைத்தியா் இல்லாமையால் நோயாளிகள் பொிதும் சிரமப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியா் விடுமுறையில் சென்றுள்ளமையால் சனி ஞாயிறு நாட்களில் வைத்தியா் இல்லாத நிலமை வைத்தியசாலையில் காணப்பட்டது. தாதிய உத்தியோகத்தரே வைத்தியு கடமையில் காணப்படுகின்றாா்.
பௌதிக வளத்தினால் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வைத்திய சேவை என்பது மிகவும் முக்கியமான தேவையாக காணப்படுகின்றது. இவ் வைத்தியசாலையில் 24 மணி நேரமும் ஒரு வைத்தியா் கடமையில் இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது
வைத்தியா் பாலச்சந்திரன் அவா்களின் மரணத்திற்கு பின்னா் பதில் வைத்தியா்கள் வரவாமை பெரும் சவாலகவே இருக்கின்றது.
வைத்தியா் விடுமுறையில் செல்கின்ற போது மாற்று வைத்தியா் கடமையில் இடுபடுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் தொிவிக்கின்றாா்கள். அத்துடன் எமது இவ்வாற பின்தங்கிய பிரதேசங்களில் சேவையாற்ற வைத்தியா்கள் மனமுவந்து வருகை தர வேண்டும் எனபதும் மக்களது கோாிக்கையாகும்.