யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்துவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2025 நேற்று முன்தினம் (ஒக். 03) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது “யாழ்ப்பாணம் – 4″ (மரபுகளும் நம்பிக்கைகளும்) நூல் வெளியீடுஇடம்பெற்றது. இதன் முதற்பிரதியினை யாழ் அரசாங்க அதிபர் வெளியிட்டு வைக்க நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அரசாங்கஅதிபர் திருவாட்டி இமெல்டா சுகுமாா் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நூலிற்கான வெளியீட்டு உரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள்பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன் அவர்கள் வழங்கியிருந்தார்.
அதன்போது அவர் …
இந் நூலானது எமது மானிட விழுமியங்களை உள்ளடக்கியவகையில், 27 கட்டுரைகளையும், 09 கவிதைகளையும், ஒரு சிறுகதையினையும்தாங்கியவண்ணம் உள்ளதாகவும் மேலும் விருது பெறுபவர்களின்விபரங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து, இந்நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் எனவும், எதிர்கால சந்ததிக்கு வாழ்வியலுடன்கூடிய பண்பாட்டு நூலாக கையளிக்கும் சிறப்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்து “யாழ்ப்பாணம் – 04″ நூலிற்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.