பட்டப்பகலில் வீடு புகுந்து 13 பவுண் தங்க நகைகள் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பட்டப்பகலில் 13 பவுண் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது.

நேற்று(செப்ரெம்பர் 27) நண்பகல் 12.00 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டு உரிமையாளர்கள் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக பாடசாலைக்கு சென்றிருந்த போது குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article