வேகமாக பரவி வரும் covid19 தொற்று நோய் மற்றும் வணக்கஸ்தலங்களில் கூட்டு செயற்பாடுகளை தவிர்க்குமாறு கூறும் சுகாதார வழிகாட்டல்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையை எந்தவொரு பள்ளிகளிலும் நடத்த கூடாது என இலங்கை வக்ஃபு சபை தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஈதுல் பித்ர் தினத்தில் பள்ளிவாயல்கள் மூடப்பட்டு இருத்தல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அதன்படி வீட்டில் குடும்பத்துடன் பெருநாள் தொழுகையை தொழுமாறும் வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ளுமாறும் முஸ்லிம்கள் அனைவரும் வேண்டப்படுகிறார்கள்.