நெதர்லாந்தில் நண்பரைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த யாழ். இளைஞன்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெதர்லாந்தின் உத்ரெக் மாகாணத்தில் அமைந்துள்ள வின்கெவீன்ஸ் பிளெசென் ஏரியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், இணுவில் மஞ்சத்தடியைச் சேர்ந்தவரும், நெதர்லாந்தில் தற்போது வசிப்பவருமான 21 வயதான அனுசன் அகிலன் என்பவரே உயிரிழந்தவர் என்று அறியமுடிகின்றது.

பிரான்ஸில் இருந்து வந்திருந்த நண்பர்களில் ஒருவர் நீரேரியில் சிக்குண்ட வேளை அவரை மீட்டுப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்ற சமயத்திலேயே அனுசன் நீரில் மூழ்கிக் காணாமற்போனார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

ஏரியில் மீட்புப் பணியாளர்கள் நீண்ட நேரம் தேடுதல் நடத்தியபிறகே அவரது உடலைக் கண்டுபிடித்து மீட்டனர் என்றும், கரைக்கு கொண்டுவரப்பட்டு அவசர முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமற்போனது என்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து சென்றிருந்த 25 வயதான இளைஞர் நீரில் இருந்து மீட்கப்பட்ட போதிலும் சுயநினைவு திரும்பாத நிலையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது பெயர் விவரங்கள் அறியவரவில்லை.

Share this Article