நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நெடுவூர்த் திருவிழா ஏற்பாட்டுக்குழு அமைத்தல் பற்றிய ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நிகழ்நிலை (Zoom ) தொழிநுட்பம் ஊடாக நாளைமறுதினம்(டிசம்பர் 23 ) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அமைப்பினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ மீண்டும் ஊருக்குப் போகலாம் “ என்னும் தொனிப்பொருளில் உலகம் முழுவதும் வாழும் நெடுந்தீவின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் மண்ணையும் உறவுகளையும் வளம்பெறச் செய்யும் நோக்குடன் நமது மண்ணில் அடுத்த வருடம் 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை முற்றிலும் மாறுபட்ட அம்சங்களுடன் அனைத்து துறைசார் விடயங்களும் உள்ளடங்கியதான “நெடுவூர்த் திருவிழா” நிகழ்வினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும், உலகின் எல்லா நாடுகளிலும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகள் நண்பர்கள் எமது மண்ணில் ஒன்றுகூடி மகிழ்வுடன் கூடிய கோலாகல திருவிழாவாக நிகழ்ச்சி நிரல் அந்த வாரத்தின் 7 நாட்களும் திட்டமிடப்படவுள்ளது.
எனவே உலகம் முழுவதும் வாழும் நெடுந்தீவின் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் வல்லுனர்கள், பல்துறை ஆளுமைகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே இவ்விழாவினை ஒழுங்கமைப்பதற்கு ஏதுவாக ஏற்பாட்டுக்குழுவினை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இக்குழுவில் உள்ளூர், ஏனைய மாவட்டங்கள், சர்வதேச நாடுகள் சார்ந்து பணியாற்ற விரும்புபவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும் +94 (77) 840 0534, +94777395242.
இவ்விழா தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நிகழ்நிலை (Zoom ) தொழிநுட்பம் ஊடாக நடைபெறவுள்ளது. எனவே அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலம்- 23.12.2023(சனிக்கிழமை )
நேரம் – 6:00PM(SRILANKA), 12:30PM(UK), 1:30PM(FRANCE), 7:30AM(CANADA)
ZOOM ID- 81112728524
PASSWORD:- 7777
https://us02web.zoom.us/j/81112728524