நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தினர் விடுத்த நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் கனடா IMHO நிறுவனத்தின் ஊடாக நெடுந்தீவைச் சேர்ந்த அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியலிங்கம் சுவாமிநாதன் அவர்களால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் வைத்தியலிங்கம் சுவாமிநாதன் அவர்களிற்கும் கனடா IMHO நிறைவனத்தினருக்கும் வைத்தியசாலை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.