நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தின் சுற்றாடல் சார் செயற்பாடுகளின் பயிலமர்வு – 2024 இன்றையதினம் (ஆகஸ்ட்15) காலை சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் மு.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக கல்வி வலய பிரதிநிதியாக பி.இரட்ணராஜ் , டெல்ப்ட் சமுத்திரா ஹோட்டல் முகாமையாளர் அ. சேரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் கண்காட்சியும், சுற்றாடல் சார் செயற்பாடுகளின் செயலமர்வும் இடம்பெற்றதுடன் இதன்போது நெடுந்தீவு கோட்டத்திற்கு உட்பட்ட தரம் 04,05 சகல மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றாடல் சார் செயற்பாடுகளின் பயிலமர்வு – 2024 இற்கான அனுசரணையினை டெல்ப்ட் சமுத்திரா ஹோட்டல் நிறுவனத்தினர் மற்றும் யாழ் சிற்றி ஹாட்வெயர் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.