நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் பேரம்பலம் (விசக்கடி வைத்தியர் ) அவர்கள் கடந்த 2 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் நெடுந்தீவு மேற்கில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 07 ஆம் திகதி அன்று இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவுக்கான போக்குவரத்து நெருக்கடியான காலப்பகுதிகளில் இவரது கைராசி வைத்தியம் பல மக்களுக்கு சிறந்த சேவையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.