நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி பிரிவினரால் இன்றையதினம் (மே31) “நண்பாபோதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம்ஒன்றினை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இன்றுமுதல் (மே 31) ஜூன் 14 வரை நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட உள்ள நிலையில் சமுர்த்தி அபிவிருத்திதிணைக்களத்தின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக நெடுந்தீவு பிரதேசசெயலகசமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில் புகைத்தல் மற்றும் மதுப்பாவனைக்கு எதிரானவிழிப்புணர்வு செயற்பாடு மற்றும் கொடிதினம் என்பன இன்று (மே31) நெடுந்தீவு பிரதேசசெயலக முன்றலில் வைத்து நெடுந்தீவு பிரதேசசெயலர் (பதில்) திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களுக்கு கொடியினை அணிவித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வுகளில் நெடுந்தீவு பிரதேசசெயலர் (பதில்) திருமதி நிவேதிகா கேதீசன், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் புகைத்தலை இல்லாதொழிக்கும் வகையில் புகைப்பொருட்களின் மாதிரிகள் செயலக முன்றலில் தீயிட்டு எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.