அரசு சதொச நிறுவனம் ஒன்று தங்கள் பிரதேசத்திற்கும் தேவை என நெடுந்தீவு மக்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.
நெடுந்தீவு பகுதியில் பல்வேறு கடைகளில் விலைக்கட்டுப்பாட்டுக்கு மேல் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் தங்கள் பகுதிக்கும் சதொச நிறுவனம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என மக்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பா ணத்தில் பல்வேறு பிரதேசங்களில் சதோச விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் தீவுப்பிர தேசங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை .
எனவே மிக வறிய குடும்பங்கள் வாழும் தீவுப் பிரதேசத்திலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்காக அரச சதொச நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.