நெடுந்தீவு பிரதேச செயலகப் சமுர்த்தி பிரிவால் நேற்றையதினம் ( ஆகஸ்ட் 06) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல்கருத்தமர்வு நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைக்காரியால முகாமையாளர் ந.நகுலறாணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளராக தரம் 05 புலமைப்பரிசில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரான அ. கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில்பரீட்சைக்கான முன்னோடி கருத்தமர்வை நிகழ்த்தியதுடன் நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட தரம் 05 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.