யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நெடுந்தீவில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகள் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிவுறுத்துவது தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (09/12) நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் ச.சத்தியவரதன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மழை காலத்திலும், பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவாக முடிவுறுத்த வேண்டுமெனவும் , ஒப்பந்த்தாரர்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தினரது ஒத்துழைப்போடு இதனை நிறைவேற்றி முடிப்பதெனவும் தீர்மானித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் உப தவிசாளர், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி ஒப்பந்ததாரர்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.