தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகு போக்குவரத்து இடம்பெறுதல் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை அதிகாலையே (மே 25 சனிக்கிழமை ) முடிவு செய்யப்படும் என தெரியவருகின்றது.
இதேவேளை கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரது செயற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இன்றையதினம் (மே 24) படகு சேவைகள் இடம்பெறாமையால் நெடுந்தீவிலும் , யாழ் நகரிலும் பெருமளவு மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.