நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் வருடாந்த வர்த்தகச் சந்தை நிகழ்வானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை?நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நிலைய மாணவர்கள் அனைவரும் தம்மால் முடிந்தளவான பொருட்களை குறித்த சந்தையில் விற்பனை செய்ய முடியும். பெற்றோர்களும் தமது பிள்ளைகளுடன் குறித்த இவ் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்பதுடன் அனைத்து பெற்றோர்களும், மாணவர்களும் இவ் வர்த்தகச் சந்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இவ் வர்த்தகச் சந்தையில் பொதுமக்களும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் உணவுப் பொருட்கள், உள்ளூர் உற்ப்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் என அனைத்து வகையான பொருட்க்களையும் அனைவரும் அலுவலக வளாகத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.