நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான இன்று(நவம்பர் 14) மாலை நேர படகு சேவை கடும் காற்று , கடற் கொந்தளிப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பெருமளவு பயணிகள் யாழ்நகர் செல்வதற்காக துறைமுகத்தில் வந்து படகில் செல்ல ஆயத்தமாகிய நிலையில் அறிவித்தல் கிடைக்கப் பெற்றமையால் பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.
மாலை 3 மணிக்கு நெடுந்தீவில் இருந்து செல்ல வேண்டிய குமுதனி படகே இவ்வாறு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி மாலைநேர சேவையில் வரவேண்டிய மக்கள் குறிகாட்டுவானில் அந்தரித்தனர்.