நாடளாவிய ரீதியில் இந்துக்களால் ஆடிப்பூர விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும் . அந்த வகையில் நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஆலய நிர்வாக சபை ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு திரு.பிரம்மஸ்ரீ.தி.சிவபாலசர்மா குருக்களால் ஆடிப்பூர விழா சிறப்பாக இடம் பெற்றது.
இன்று (ஜீலை 24) காலை ஆரம்பமாகிய இவ் ஆடிப்பூர விழாவில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்; பெற்றதுடன் தற்Nபுhது அம்பாள் நெடுந்தீவு ஆலயங்கள் தரிசித்து கிராம மக்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் கிராமம் முழுவதும் சுற்றி ஊர்வலம் வரும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது.
ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கை தொடர்ந்து ஆடிப்பூர விழா கொண்டாடப்படும் இதில் அம்மனுக்கு ஆடை முதல் அணிகலன் வரை சீர்;வரிசையாக கொண்டு செல்லப்பட்டு பக்தி உணர்வுடன் அம்மனுக்கு சாத்தி வழிபடும் நாளாகவும் இந்த ஆடிப்பூரத்தை இந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.