நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று (28/12) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

Share this Article
Leave a comment