நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு அருகிலுள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணைகள் முடிவடைந்த பின், அவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் வாயிலாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article