நெடுந்தீவு ஊரும் உறவும் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 3) காலை 9:30 மணிக்கு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது Good Market நிறுவனத்தினதும் GIZ நிறுவனத்தினதும் திட்ட அதிகாரிகள் பங்கேற்புடனேயே செயலமர்வு இடம்பெற்றது.
உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்கியதோடு காட்சிக்கு வைக்கப்பட்ட உள்ளூர் உற்பத்திகளை பார்வையிட்டதுடன் அதில் சிலவற்றை அதிகாரிகள் கொள்வனவு செய்து கொண்டு சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் ஊரும் உறவும் அமைப்பின் ஆலோசகர் கலாநிதி.வை.ஜெயமுருகன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் எதிர்வரும் December மாதத்தில் GOOD MARKT இன் மிகப் பெரிய சந்தப்படுத்தல் நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது எனவும் இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான “JAFFNA CORNER” எனும் ஒரு தொகுதி ஏற்படுத்தப்பட்டு வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதில் நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உற்பத்திகளை பொதியிடல் தொடர்பில் உதவிவழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் நிறுவன அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வருகைதந்திருந்த அதிகாரிகள் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் “நல்வாழ்வு நம் கையில்” எனும் விவசாய அபிவிருத்தி செயற்திட்ட தோட்டங்களையும் பர்வையிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு.அமுதமந்திரனின் முயற்சியினாலேயே குறித்த நிறுவன அதிகாரிகள் நெடுந்தீவுக்கு வந்து சென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் சந்தைப்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு கடந்த மாதமளவில் கொழும்பில் Good Market நிறுவனத்தினரால் நடத்தப்பட்டிருந்தது. அதில் நெடுந்தீவைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.