நெடுந்தீவு அறநெறிப் பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தளபாடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சந்நிதியான் ஆச்சிரமம் நெடுந்தீவு அறநெறிப் பாடசாலைக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை கடந்த 14 ஆம் திகதி வழங்கியுள்ளது.

நெடுந்தீவு மத்தி பிரதேசத்தில் அமைந்துள்ள வன்றொண்டர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவை வழங்கப்பட்டுள்ளன.

15 மேசைகள், 15 வாங்குகள் என்பன குறிக்காட்டுவான் இறங்குதுறையில் வைத்து நெடுந்தீவு மத்தி அறநெறிப்பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டத்தை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article