நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபர் அமரர் சீ. வீ. ஈ. நவரத்தினசிங்கம் அவர்களின் 117 ஆவது ஜனன தின நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை (பெப்.08) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவுமகாவித்தியாலயத்தில் உள்ள நவரத்தினசிங்கம் அரங்கில் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் கனடா சார்பில்இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள வறிய மாணவர்களுக்கும், க.பொ.த. சாதாரண பரீட்சையில் சித்தி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றமாணவர்களுக்கும் கல்வி ஊக்க தொகை வழங்கப்படவுள்ளது.
அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் கனடா அழைப்புவிடுத்துள்ளது.