நண்பர்கள் வட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட நிறைவு தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவு வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம் சிற்பாக ஒழுங்கு செய்யப்பட்டது
இந்நிகழ்வில் 46 குருதிக் கொடையாளர்கள் உயிர்காக்கும் உன்னதபணியில் இணைந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் 05 பேர் நெடுந்தீவு பொலிஸ் நிலைய உத்தியோக்கத்தர்களும் நெடுந்தீவினை சார்ந்த 41 பேரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வினை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியர் மதிப்பிற்குரிய திரு.ம.பிரதீபன் அவர்கட்கும் அவருடன் இணைந்து செயலாற்றிய வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்கிய நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் குருதி வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கிய அனைத்து குருதி கொடையாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்