நெடுந்தீவில் கடற்தொழில் பரிசோதகர் – மீனவரை தாக்க முற்பட்டாரா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களது சொத்துக்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் முறைகேடு இடம்பற்றதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம்  (18/12) நெடுந்தீவுக்கு வருகை தந்த கடற்தொழில் பரிசோதகர்,  கடற்தொழில் சமாசத்தினரை அனுகாமல் தன்னிச்சையாக விபரங்களை சேகரித்தபோதே மீனவர்கள் குழப்பமடைந்தனர்

இதனடிப்படையில் கடற்தொழில் சமாசத்தினரால் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கடற்தொழில் பரிசோதகர் கலந்து கொண்டார், இதன்போது பொதுமகன் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கோபங்கொண்டு அவரை தாக்க முற்பட்ட ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காணொளியும் எடுககப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித இறுதி முடிவுகளும் இன்றி கூட்டம் கலைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

Share this Article