மரித்த விசுவாசிகளுக்கான இரங்கல் திருப்பலியானது நெடுந்தீவில் உள்ள 03 சேமக்காலைகளிலும் இன்று(நவம்பர் 2) ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நெடுந்தீவு கிழக்கு கட்டுறாமன்சல்லி கிறீஸ்தவ சேமக்காலையில் இன்று காலை 6.30 மணிக்கும் , நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் சேமக்காலையில் காலை 08:30 மணிக்கும் , நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் மாலை 4.30 மணிக்கும் மரித்த விசுவாசிகளுக்கான இரங்கல் திருப்பலியானது ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் மரித்த விசுவாசிகளின் கல்லறைகளும் ஆசீர்வதிக்கப்பட்டது.
திருப்பலி மற்றும் தொடர்புடைய ஆன்மீக நிகழ்வுகளில் உறவினர்கள் கலந்துகொண்டு இறைவேண்டலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.