நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் (மே 22) சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்பதாக மின்பிறப்பாக்கிகளில் அடிக்கடி ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறு மற்றும் அளவுக்கதிகமான விஸத்தரிப்பு போன்ற காரணங்களால் நெடுந்தீவு பகுதியில் மின்சாரம் கடந்த ஒரு மாதமாக தடைப்பட்டதால் மக்கள் தாம்பல்வேறு அசௌகரியங்களை சந்தித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இதற்கான தீர்வை வழங்குமாறும் கோரி யாழ்ப்பாணம் மாவட்டஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது
இதையடுத்து துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பயனாக கடந்த வாரம் கடற்படையினரது உதவியுடன் 380 கிலோவாட்ஸ் மின்பிறப்பாக்கி ஒன்று நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டு நெடுந்தீவு மின்சார நிலையத்தில் பொருத்தப்பட்டு நெடுந்தீவின் பிரதானமின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டு இன்றையதினம் (மே 22) காலை 10.00 குறித்த மின்பிறப்பாக்கி மூலமாக நெடுந்தீவுக்கான மின்சார சேவை சீரானமுறையில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் புதிய மின்பிறப்பாக்கியை நெடுந்தீவுக்கு துரித கதியில்பெற்றுக்கொடுத்து தடையற்ற மின்சார வழங்கலை மேற்கொண்ட அமைச்சர்டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெடுந்தீவு மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.