சாவகச்சேரி நகர சபையின் நுணாவில் பொது நூலக வளாகத்தில் வைத்து பசு மாட்டைஇறைச்சியாக்கி விற்பனை செய்த பொதுநூலக ஊழியர் உட்பட்ட இருவர்அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டனர்.
நுணாவில் பொதுநூலகத்துக்கு அருகிலுள்ள காணியில் மேய்ச்சலுக்காககட்டப்பட்ட பசுமாடு காணாமல் போனது.
இந்த நிலையில் பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் தேடுதல்நடத்திய போது நூலக மதிலுக்கு அருகில் மாட்டின் தலை உள்ளிட்டபாகங்களைக் கண்டனர்.
இதையடுத்து நூலகத்துக்குள் நுழைந்து பார்த்த பொழுது நூலககுளியலறைக்குள் வைத்து பசுவை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளைக்கண்டுள்ளனர்.
இதனால் நூலக ஊழியர் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்தபொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம்1.00 மணியளவில் பசுவை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து மற்றையவரையும் பிடித்த இளைஞர்கள் நூலகத்தைஉடனடியாகவே மூடி சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துஇருவரையும் ஒப்படைத்தனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.