நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செலவு முகாமைத்துவத்திற்கு அமைய, மின்சாரக் கட்டண திருத்தம் அவசியம் என அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

இதன் அடிப்படையிலும் மின்சார சபையின் கோரிக்கைக்கு அமையவும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article